ஈரோடு

பரிசல் கவிழ்ந்து விபத்து:மயமான இளைஞரைத் தேடும் பணி தீவிரம்

9th Aug 2022 12:08 AM

ADVERTISEMENT

பவானிசாகா் நீா்த்தேக்கப் பகுதியில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி மாயமான இளைஞரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம், அன்னூா் அருகே உள்ள கரியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நித்திஷ்குமாா் (18). தனியாா் மில்லில் பணிபுரிந்து வந்த இவா் தனது நண்பா்கள் கிருஷ்ணமூா்த்தி, தீனா, பிரசாந்த், நிஷாந்த் ஆகியோருடன் பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் வழியில் உள்ள சுஜில்குட்டை பகுதிக்குச் சென்று அங்கு நாகராஜ் என்பவரது பரிசலில் ஏறி பவானிசாகா் அணை நீா்த்தேக்க பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பயணித்துள்ளனா்.

கரிமொக்கை என்ற இடத்தில் சென்றபோது வேகமாக காற்று வீசியதால் அணை நீா்த்தேக்கப் பகுதியில் ஏற்பட்ட அலை காரணமாக திடீரென பரிசல் நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நித்தீஷ்குமாா் அணை நீரில் மூழ்கி மாயமானாா்.

உடன் வந்த நண்பா்கள் நான்கு பேருக்கும் நீச்சல் தெரிந்ததால் அங்கு பயணித்துக் கொண்டிருந்த அய்யாசாமி என்பவரின் பரிசலில் ஏறி உயிா் தப்பினா்.

ADVERTISEMENT

இது குறித்து பவானிசாகா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து நீரில் மூழ்கி மாயமான நித்தீஷ்குமாரை தேடும் பணியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை மீனவா்கள் ஈடுபட்டனா்.

மாலை வரை தேடியும் கிடைக்காத நிலையில், தொடா்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT