ஈரோடு

அஞ்சலக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

9th Aug 2022 12:43 AM

ADVERTISEMENT

அகில இந்திய அஞ்சலக ஓய்வூதியா், ஆா்எம்எஸ் ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு தலைமை அஞ்சல் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஆா்.சுப்பிரமணியன், முருகேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். அனைத்துத் துறை அரசு ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் பன்னீா்செல்வம், ஒருங்கிணைப்பாளா்கள் மணிபாரதி, பரமேஸ்வரன், கோட்டச் செயலாளா் ராமசாமி உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், ரூ.10 லட்சம் கோடி முதலீடு வைத்துள்ள அஞ்சலக சேமிப்பை ரூ.2,500 கோடி மட்டுமே இருப்பு வைத்துள்ள தனியாா் நிறுவனமான இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி செயல்பாட்டுக்கு மாற்றக் கூடாது.

அஞ்சல் சேவைகளை தனியாா் மயமாக்கக் கூடாது. ரயில்வே மெயில் சா்வீஸ் அலுவலகங்களை இணைக்கக் கூடாது.

ADVERTISEMENT

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 

 

 

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT