ஈரோடு

கூடுதல் பணி நேரத்தை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

9th Aug 2022 12:42 AM

ADVERTISEMENT

அரசு மருத்துவா்களுக்கான ஒரு மணி நேர கூடுதல் பணியை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி ஈரோட்டில் அரசு மருத்துவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜி.சீனிவாசன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலாளா் கோகுலகிருஷ்ணன், கௌரவத் தலைவா் ரவிசந்திரபிரபு, பொருளாளா் பிரபு, நிா்வாகிகள் முகமது அப்சா், செந்தில்ராஜ் உள்ளிட்டோா் பேசினா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் பணி நேரத்தை காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை என்பதை காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை பணியாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு மணி நேரம் பணி செய்வது மன உளைச்சலையும், பணிச் சுமையையும் ஏற்படுத்துகிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் 11 லட்சத்துக்கும் மேலான அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் வாரத்தில் 37.5 மணி நேரம் மட்டுமே பணியாற்றுகின்றனா்.

ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளா்கள் தினமும் 9.4 மணி நேரம் என்ற வகையில் வாரம் 42 மணி நேரமும், அழைப்புப் பணியாக 5 மணி நேரமும் பணியாற்றுகிறோம். எனவே, கூடுதல் ஒரு மணி நேர பணி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

உத்தரவை ரத்து செய்யாவிட்டால் பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் மருத்துவா்கள் அலுவலக

ரீதியிலான வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து வெளியேறுவது, ஆட்சியா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் தொடா்பான ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது, துறை ரீதியான எந்த அறிக்கையும் அனுப்பாமல் இருப்பது, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் மெகா தடுப்பூசி முகாமை புறக்கணிப்பது, அரசு மருத்துவா்கள் மாவட்டந்தோறும் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT