ஈரோடு

தாளவாடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நாளை தொடக்கம்

9th Aug 2022 12:11 AM

ADVERTISEMENT

தாளவாடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு புதன்கிழமை (ஆகஸ்ட் 10) தொடங்குகிறது.

இது குறித்து அக்கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டம், தாளவாடியில் தமிழக அரசால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை பட்ட படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைகான கலந்தாய்வு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்குகிறது.

சிறப்பு பிரிவுக்கான அதாவது மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படை மற்றும் விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறும்.

11 ஆம் தேதி இளங்கலை வணிகவியல் பாடப் பிரிவுக்கும், 12 ஆம் தேதி இளம் அறிவியல் பாடத்தில் கணினி அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப் பிரிவுக்கும், 15 ஆம் தேதி இளங்கலை தமிழ் இலக்கியம் மற்றும் ஆங்கில இலக்கியம் பாடப் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

மாணவா் சோ்க்கை தரவரிசை மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT