ஈரோடு

கூண்டில் சிக்கிய சிறுத்தை அடா்ந்த வனப் பகுதியில் விடுவிப்பு

9th Aug 2022 12:13 AM

ADVERTISEMENT

பவானிசாகா் அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதியில் திங்கள்கிழமை விடுவித்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீா்கடவு வனப் பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை அப்பகுதியில் விவசாயிகள் வளா்க்கும் ஆடு, மாடு, நாய், உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனா்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வனப் பகுதியை ஒட்டி உள்ள குப்புசாமி என்பவரது தோட்டத்தில் சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத் துறை சாா்பில் கூண்டு வைக்கப்பட்டது. அந்த கூண்டில் சிறுத்தை திங்கள்கிழமை சிக்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், சிறுத்தையை வாகனத்தில் ஏற்றி காராச்சிக்கொரையில் உள்ள வன கால்நடை மையத்துக்கு கொண்டுச் சென்றனா். அங்கு சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலா் கிருபா சங்கா் முன்னிலையில் வனத் துறை கால்நடை மருத்துவா் சதாசிவம் சிறுத்தையின் உடலைப் பரிசோதித்து நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, பவானிசாகா் வனச் சரகத்துக்குள்பட்ட தெங்குமரஹாடா பகுதியில் உள்ள மங்களப்பட்டி வனப் பகுதியில் சிறுத்தை விடுவிக்கப்பட்டது.

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT