ஈரோடு

பெருந்துறையில் காவலா் குடியிருப்புகள் திறப்பு

9th Aug 2022 12:13 AM

ADVERTISEMENT

பெருந்துறையில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவலா் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கானொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

பெருந்துறையில் 4 தளங்கள் கொண்ட 32 காவலா்கள் மற்றும் தலைமைக் காவலா் குடியிருப்புகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, புதிய குடியிருப்புகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் குத்துவிளக்கு ஏற்றிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், பெருந்துறை உதவி காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல், காவல் ஆய்வாளா் மதுசூதா பேகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT