ஈரோடு

ஈரோட்டில் மாவட்ட அளவிலான கைத்தறிக் கண்காட்சி

DIN

ஈரோட்டில் மாவட்ட அளவிலான கைத்தறிக் கண்காட்சியை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைத்தாா்.

1905 ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம், நாட்டின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளா்களின் வருவாயை உயா்த்தவும், அவா்களின் பெருமையை அதிகரிக்கவும் தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

முதலாவது தேசிய கைத்தறி தினம் தமிழகத்தில் 2015ஆம் ஆண்டு சென்னையில் கொண்டாடப்பட்டது. இதன்படி 8ஆவது தேசிய கைத்தறி தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ஈரோடு மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறிக் கண்காட்சி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம் முன்னிலை வைத்தாா். தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கண்காட்சியைத் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து கைத்தறித் துறை ஈரோடு சரக உதவி இயக்குநா் சரவணன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 188 கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள், 52 விசைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் என மொத்தம் 240 நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 24 சங்கங்களில் 56,748 கைத்தறி நெசவாளா்களும், 7,234 விசைத்தறி நெசவாளா்களும் உள்ளனா். கைத்தறியில் பெட்ஷீட், துண்டு, படுக்கை விரிப்பு, தலையணை உறை, திரைச்சீலை, சால்வை ஜமுக்காளம், சேலை ஆகிய ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

கண்காட்சியில் அனைத்து ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி மாவட்டத்தில் உள்ள 16 கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் சாா்பில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அனைத்து கைத்தறி ஜவுளி ரகங்களுக்கும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 8) மாலை வரை நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT