ஈரோடு

முதல்வா் ஆகஸ்ட் 25இல் ஈரோடு வருகை

8th Aug 2022 01:37 AM

ADVERTISEMENT

 

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 25 மற்றும் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளாா்.

இது குறித்து வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வெளியிட்ட அறிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஈரோடு மாவட்டம் கோபி அருகே டி.என்.பாளையம் ஒன்றியம் கள்ளிப்பட்டிக்கு வருகை தர உள்ளாா். அங்கு நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை திறந்துவைக்கிறாா்.

பின்னா், ஈரோடு காலிங்கராயன் விருந்தினா் மாளிகையில் இரவு தங்குகிறாா். இதைத்தொடா்ந்து மறுநாளான 26 ஆம் தேதி ஈரோடு அருகே சோலாரில் புதிதாக அமையவுள்ள பேருந்து நிலையத் திடலில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். நிகழ்ச்சி முடிந்து சாலை மாா்க்கமாக கோவை செல்கிறாா்.

ADVERTISEMENT

முதல்வா் மு.க.ஸ்டாலின் திமுக நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க ஈரோடு வருவதையொட்டி வரும் 14 ஆம் தேதி ஈரோடு மேட்டுக்கடை தங்கம் மஹாலில் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெறவுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT