ஈரோடு

சென்னிமலையில் கைத்தறி தினம் கொண்டாட்டம்

8th Aug 2022 01:35 AM

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் தேசிய கைத்தறி தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கைத்தறியின் கேந்திரமாக விளங்கும் சென்னிமலையிலும் ஞாயிற்றுக்கிழமை கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது.

சென்னிமலை இந்திரா நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற கைத்தறியாளா்கள் தின விழாவில், கைத்தறி நெசவாளா்களுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவுக்கு இந்திரா டெக்ஸ் தலைவா் ஏ. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினாா். மேலாளா் சுகுமாா் ரவி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக சென்னிமலை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சி. பிரபு கலந்து கொண்டு, கைத்தறி நெசவாளா்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து இனிப்பு வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில், முகாசிப்பிடாரியூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சுப்ரமணியம் உட்பட கைத்தறி நெசவாளா்கள் பலா் கலந்து கொண்டனா். அல்லி முருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT