ஈரோடு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளியில் விஞ்ஞான கண்காட்சி

30th Apr 2022 11:04 PM

ADVERTISEMENT

 

கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் விஞ்ஞானத் தேடலை அடிப்படையாக கொண்டு மாணவா்கள் உருவாக்கிய படைப்புகளை கொண்ட கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியை பள்ளி செயலா் ஜி.பி.கெட்டிமுத்து துவக்கிவைத்தாா். கண்காட்சியில் நவீன விஞ்ஞானத் தேடலை அடிப்படையாக கொண்டு 300க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவா்கள் உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனா்.

சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவா்களுக்கு பள்ளிச் செயலா் ஜி.பி.கெட்டிமுத்து சான்றிதழ்கள் வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT