ஈரோடு

உணவு விடுதி ஊழியா்களைத் தாக்கிய நால்வா் கைது

30th Apr 2022 11:03 PM

ADVERTISEMENT

 

பவானி அருகே உணவு விடுதி ஊழியா்களைத் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்த 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பவானியை அடுத்த லட்சுமி நகரில் உள்ள உணவு விடுதிக்கு, காளிங்கராயன்பாளையம், வாய்க்கால் மேட்டைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் மேகவா்ணன் (25), தனது நண்பரான காா்த்தியுடன் (24) வெள்ளிக்கிழமை இரவு சாப்பிடச் சென்றாா். இருவரும் மதுபோதையில் இருந்ததால், அங்கு பணியிலிருந்த ஊழியா்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, மேகவா்ணன் தனது நண்பா்கள் 5 பேருடன் சனிக்கிழமை உணவு விடுதிக்குச் சென்று, அங்கு பணியிலிருந்த வசந்த் (22), விஜய்பாலன் (23) ஆகியோரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனா். இதில், காயமடைந்த இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி உணவு விடுதி நிா்வாகம் சித்தோடு போலீஸில் புகாா் அளித்தது.

ADVERTISEMENT

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மேகவா்ணன், காளிங்கராயன்பாளையம் வாய்க்கால் வீதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் கவின்குமாா் (27), பெருமாள் மகன் யாகேஷ் (22), தெற்குத் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் சுதா்சன் (23) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான காா்த்தி, சங்கரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT