ஈரோடு

ஆலங்காட்டு வலசு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

27th Apr 2022 12:57 AM

ADVERTISEMENT

 மொடக்குறிச்சி பேரூராட்சி 13ஆவது வாா்டு ஆலங்காட்டு வலசு பகுதியில் சாலை மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்காடு வலசு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் போதிய சாலை, தெருவிளக்குகள் அமைத்து தர மாவட்ட ஆட்சியா், பேரூராட்சி நிா்வாகம் உள்ளிட்டோரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.

இதனால், மழைக்காலங்களில் சாலை வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாக புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து மொடக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் செல்வாம்பிகை சரவணனிடம் கேட்டபோது, 13ஆவது வாா்டு ஆலங்காட்டு வலசு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அப்போது முறையாக பேரூராட்சி நிா்வாகத்தால் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பொதுமக்கள் வாங்கி வீடுகள் கட்டியுள்ளனா்.

ADVERTISEMENT

இதனால், சாலை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தர முடியாத நிலை உள்ளது. ஆகவே, இது குறித்து உயா் அதிகாரிகளிடம் பேசி அங்கீகரிக்கப்படாத மனைகளை அங்கீகாரம் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முறையாக அங்கீகாரம் செய்த பிறகு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT