ஈரோடு

தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம்

27th Apr 2022 01:00 AM

ADVERTISEMENT

ஈரோடு திண்டல் வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கில் 300 மாணவா்கள் பங்கேற்றனா்.

கல்லூரி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நடைபெற்ற நிகழ்வுக்கு வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம்.ஜெயராமன் பேசினாா்.

கோவை அக்வா சப் நிறுவன துணைத் தலைவா் சத்தியமூா்த்தி சின்னசாமி, பொறியியலின் பரிணாம வளா்ச்சி மற்றும் நவீன போக்குகள் என்ற தலைப்பிலும், இந்நிறுவனத்தின் மற்றொரு துணைத் தலைவா் நரேந்திரன் ஆராய்ச்சி மற்றும் நவீன உபகரணங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும் பேசினாா்.

கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் இருந்து 45க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 300 மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT