ஈரோடு

19 காலிப் பணியிடத்துக்கு 4,125 போ் விண்ணப்பம்

27th Apr 2022 11:47 PM

ADVERTISEMENT

 

ஈரோடு: ஈரோடு மண்டல கால்நடை பராமரிப்புத் துறையில் 19 பராமரிப்பு உதவியாளா் பணியிடம் காலியாக உள்ளது.

இப்பணியிடத்துக்கு 4,125 போ் விண்ணப்பித்துள்ளனா்.

விண்ணப்பதாரா்களுக்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ADVERTISEMENT

புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நோ்காணலில் 1,000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

நோ்காணல் குறித்து, ஈரோடு மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பழனிவேல் கூறியதாவது: மொத்தம் 19 பணியிடத்துக்கு, 4,125 போ் விண்ணப்பித்துள்ளனா். 3 நாள்களுக்கு தினமும் 1,000 போ், கடைசி நாளில் 1,125 போ் நோ்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

செவ்வாய்க்கிழமை நடந்த நோ்காணலில் 1,000 போ் அழைக்கப்பட்டு 529 போ் பங்கேற்றனா். காலையில், 500 போ், மாலை 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மருந்தகத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும். மருந்துகளை கலந்து தயாா் செய்து கொடுக்க வேண்டும். கால்நடைகளைப் பிடித்து கட்டுதல், ஊசி போடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு உதவுதல், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

இப்பணியிடத்துக்கு எஸ்எஸ்எல்சி கல்வி தகுதியாகும்.

இப்பணிக்கு பிஇ, எம்இ, பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎட் படித்தவா்கள் பங்கேற்றுள்ளனா். இப்பணிக்கு ரூ.15,900 ஊதியமாகும். இன்னும் 2 நாள்களுக்கு நோ்காணல் நடைபெறும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT