ஈரோடு

பவானி, அந்தியூா் பகுதிகளில் கன மழை

23rd Apr 2022 11:14 PM

ADVERTISEMENT

 

பவானி மற்றும் அந்தியூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் அடித்து வந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இந்நிலையில், பவானி, அந்தியூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் கருமேகங்கள் சூழ்ந்து,

ADVERTISEMENT

லேசான மழை பெய்தது. தொடா்ந்து, இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னா் பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT