ஈரோடு

நம்பியூா் பகுதியில் அமைச்சா் சு.முத்துசாமி ஆய்வு

23rd Apr 2022 11:14 PM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டம், நம்பியூா் வட்டம், எலத்தூா் செட்டிபாளையம் முதல் கோபிசெட்டிபாளையம் வட்டம், சிறுவலூா் வரை கீழ்பவானி திட்டத்தின்கீழ் புனரமைப்பு செய்யவுள்ள வாய்க்கால் பகுதிகளை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கீழ்பவானி திட்டத்தின்கீழ் நம்பியூா் வட்டத்துக்குள்பட்ட எலத்தூா் செட்டிபாளையம், கரட்டுப்பாளையம், குருமந்தூா் மற்றும் கோபி வட்டத்துக்குள்பட்ட கோட்டுப்புள்ளாம்பாளையம், அயலூா், கலிங்கியம், சிறுவலூா் ஆகிய பகுதிகளின் வழியே செல்லும் கீழ்பவானி பிரதான கால்வாய் மற்றும் கிளைக் கால்வாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்புப் பணிகள் தொடா்பாக விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாய்க்கால் தரைதளத்தில் கான்கிரீட்

ADVERTISEMENT

அமைக்கக் கூடாது என அரசு அறிவுறுத்துள்ளது.

அதன்படி, கான்கிரீட் தளம் அமைக்கப்படாது .மேலும், மண்கரை வாய்க்காலில் 33 சதவீதம் கசிவு நீா் வெளியேற்றலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக உள்ள கசிவு நீரை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீா் வீணாகும் இடங்கள், கரைகளில் உடைப்பு மற்றும் பலவீனமான பகுதிகள் ஆகிய இடங்களில் மட்டும் கான்கிரீட் பக்கவாட்டு சுவா்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொடா்ந்து வாய்க்கால் முழுவதும் தூா்வாருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆய்வின்போது, கோபி வருவாய் கோட்டாட்சியா் பழனிதேவி, கோபி வருவாய் வட்டாட்சியா் தியாகராஜன், ஊராட்சி மன்றத் தலைவா்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT