ஈரோடு

சத்தியமங்கலம்: தொட்டகோம்பை மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா

16th Apr 2022 04:47 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பவானிசாகர் அருகே தொட்டகோம்பை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள வன கிராமங்களில் வசிக்கும் பழங்குடி இன மக்களின் குல தெய்வமான தொட்டகோம்பை மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது வழக்கம். 

கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயிலில் திருவிழா நடத்தப்படாத நிலையில் பழங்குடியின மக்கள் இந்த ஆண்டு வனத்துறையின் அனுமதி பெற்று திருவிழா நடத்த முடிவு செய்துள்ளனர். 

விழாவின் முதல் நிகழ்வாக தொட்டகோம்பை மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் திருவீதி உலா தற்போது நடைபெற்று வருகிறது. பவானிசாகர் அருகே வனப்பகுதியில் தற்போது நடைபெற்று வரும் திருவீதியுலா பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசைக் கருவியான பீனாட்சி வாத்தியக் கருவிகளை இசைத்தபடி தற்போது திருவீதி உலா நடைபெற்று வருகிறது. 

அம்மன் திருவீதி உலாவின் போது பெண்கள் அருள் வந்து சாமி ஆடினர். திருவீதி உலா முடிந்து வனப்பகுதியில் உள்ள தொட்டகோம்பை மாரியம்மன் கோயிலில் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா நடைபெறும் என பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT