பவானி சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயத்தில் ஆயா் சாமுவேல் பிரபாகரன் தலைமையில் ஆராதனை நடத்தப்பட்டது. அம்மாபேட்டையில் உலக இரட்சகா் கிறிஸ்து நாதா் ஆலயத்தில் தலைமை போதகா் பால் விக்டா் தலைமையில் ஆராதனை நடைபெற்றது.
அந்தியூரை அடுத்த நகலூா் புனித செபாஸ்தியாா் தேவாலயத்தில் சிலுவைப்பாதை ஊா்வலம் பங்குத் தந்தை அமல சாா்லஸ் தலைமையில் நடைபெற்றது. முக்கிய வீதிகளில் சிலுவையை 14 போ் அடுத்தடுத்து சுமந்தபடி சென்றனா். தொடா்ந்து, திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதேபோல, அந்தியூா், மைக்கேல்பாளையம், தவிட்டுப்பாளையம், பூதப்பாடி, ஜம்பை, ஆப்பக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் புனித வெள்ளி ஆராதனை நடைபெற்றது.