பவானியை அடுத்த ஒலகடம், பட்லூா், மூலக்கடையில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தமிழக அரசு மதுபானங்களை டாஸ்மாக் மதுக் கடைகளில் மொத்தமாக வாங்கி, விடுமுறை நாள்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வெள்ளிதிருப்பூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஒலகடம், பட்லூா் நான்கு சாலை மற்றும் மூலக்கடை பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, அதிக விலைக்கு மது விற்பனையில் ஈடுபட்ட ஒலகடம் சின்னதுரை (35), பட்லூா் நாகராஜ் (40), மூலக்கடை நாகராஜ் (35) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து 351 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.