ஈரோடு

அந்தியூரில் கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை

16th Apr 2022 11:48 PM

ADVERTISEMENT

 

அந்தியூரில் மா்ம குரல் அழைப்பதாகக் கூறிய இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

அந்தியூா், பிரம்மதேசம் புதூா் காலனியைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் லோகநாதன் (26). தனியாா் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வருகிறாா். இவா், கடந்த சில நாள்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் தன்னை யாரோ அழைப்பதாகக் கூறிக் கொண்டிருந்த லோகநாதன் சனிக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள பொதுக் கிணற்றில் திடீரெனகுதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் அந்தியூா் தீயணைப்புப் படையினா் கிணற்றுக்குள் இறங்கி சடலத்தை மீட்டனா். அந்தியூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியதோடு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT