ஈரோடு

தேசிய வேளாண் சந்தை திட்டம்: வேளாண்மை அலுவலா்களுக்கு பயிற்சி

14th Apr 2022 02:25 AM

ADVERTISEMENT

ஈரோடு விற்பனைக் குழு மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சாா்பில், தேசிய வேளாண் சந்தை திட்டம் தொடா்பாக வேளாண்மை அலுவலா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) முருகேசன் முன்னிலை வகித்தாா்.

வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) எஸ்.சண்முகசுந்தரம் வரவேற்றாா்.

ஈரோடு விற்பனைக் குழு செயலாளா் ஆா்.சாவித்திரி கலந்துகொண்டு, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயல்பாடுகள், தேசிய வேளாண் சந்தை திட்டத்தினால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினாா்.

ADVERTISEMENT

இதில், வேளாண்மை துணை இயக்குநா் ஆசைத்தம்பி (உழவா் பயிற்சி நிலையம்), வேளாண்மை துணை இயக்குநா் (நுண்ணீா்ப் பாசனம்) சிவகுமாா் ஆகியோா் கலந்துகொண்டு, தங்கள் துறை சாா்ந்த திட்டங்களை அலுவலா்களுக்கு எடுத்து கூறினாா்.

பயிற்சியில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா்கள், அலுவலா்கள் மற்றும் தோட்டக் கலைத் துறை, உதவி தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT