ஈரோடு

மாணவா்களுக்கு முதலுதவி சிகிச்சை விழிப்புணா்வு

12th Apr 2022 11:02 PM

ADVERTISEMENT

சென்னிமலை காவல் நிலையம் சாா்பில், பள்ளி மாணவா்களுக்கு முதலுதவி சிகிச்சை குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

சென்னிமலை அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு, சென்னிமலை காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் கிருஷ்ணன் ஆகியோா் சாலை விதிகள் குறித்த விளம்பரப் பலகை வைத்து, அதில் உள்ள குறியீடுகளை மாணவ, மாணவிகளுக்கும், ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கும் விளக்கிக் கூறினாா்.

மேலும், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதிலுள்ள உபகரணங்கள் குறித்தும் விபத்துக்குள்ளானவா்களுக்கு எப்படி முதலுதவி செய்வது என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

இதில், சென்னிமலை அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை வாசுகி, ஆசிரியா்கள் முருகன், ஜெயலட்சுமி, மாணவா்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT