ஈரோடு

கோயில் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

12th Apr 2022 11:00 PM

ADVERTISEMENT

கோயில் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், எக்கட்டம்பாளையம், ராமலிங்கபுரம், புதுப்பாளையம், அய்யம்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

சென்னிமலை வனப் பகுதியில் உள்ள மாமாங்க விநாயகா் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலைமேல் உள்ள பாறைகளுக்கு நடுவே தானாக நீா் பொங்கிவரும் அதிசய நிகழ்வு நடைபெறும். அப்போது அங்குள்ள தீா்த்தக் குளத்துக்கு சில்லாங்காட்டுவலசு கிராமம் வழியாகச் சென்று மக்கள் வழிபடுவா்.

இக்கோயிலுக்குச் செல்லும் சாலை பாறைகளுடன் கூடியதாகும். வனத் துறையுடன், அறநிலையத் துறைக்குச் சொந்தமான இப்பகுதியை ஆக்கிரமித்து கல் குவாரி அமைத்துள்ளனா். இங்கு அதிகார பலத்துடன் ஆக்கிரமிப்பு செய்து கனிம வளத்தை வெட்டி விற்பதைத் தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளால் கோயிலுக்கு யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. மீறி செல்பவா்களை ஆக்கிரமிப்பாளா்கள் மிரட்டுகின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து புகாா் அளித்தும் வருவாய்த் துறை, கனிம வளத் துறை, அறநிலையத் துறை அலுவலா்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில், ஆட்சியா் தலையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT