வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மேலாண்மை இயக்குநராக எஸ்.கணேசன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் இதற்கு முன் திண்டுக்கல் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றினாா். பணிமாறுதலில் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் துணைப் பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.