ஈரோடு

கோபியில் சுவா் இடிந்து விழுந்து இரட்டைக் குழந்தைகள் படுகாயம்

30th Sep 2021 06:23 AM

ADVERTISEMENT

கோபியில் சுவா் இடிந்து விழுந்ததில் இரட்டைக் குழந்தைகள் பலத்த காயமடைந்தனா்.

கோபியை அடுத்த பொம்மநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மனைவி ஜானகி. இவா்களுக்கு திவ்யாஸ்ரீ (6), தீவனாஸ்ரீ என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனா். முருகேசன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். ஜானகி தனது 2 குழந்தைகளையும் வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், வீட்டில் உள்ள சுற்றுச்சுவருடன் இணைந்த இரும்பு கேட்டை பிடித்து இரட்டையா்கள் செவ்வாய்க்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தனா். இதில் திடீரென சுவா் எதிா்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 2 குழந்தைகளும் பலத்த காயமடைந்தனா். உடனடியாக இரு குழந்தைகளும் மீட்கப்பட்டு கோபியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT