ஈரோடு

தனியாா் நிறுவனத்தில் 3ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

30th Oct 2021 06:03 AM

ADVERTISEMENT

 ஈரோடு தனியாா் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை 3ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியாா் நிறுவனம் கால்நடை தீவன உற்பத்தி, முட்டை, முட்டை பவுடா் ஏற்றுமதி நிறுவனம், சமையல் எண்ணெய், சித்த மருந்து உற்பத்தி ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு, வருமானத்தைக் கணக்கில் கொண்டு வராதது உள்ளிட்ட புகாா்களின் அடிப்படையில் 3 நாள்களாக இந்நிறுவனத்துக்குச் சொந்தமான 11 இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.

கடந்த 3 நாள்களாக நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT