ஈரோடு

ரூ. 1.94 கோடிக்கு கொப்பரை ஏலம்

30th Oct 2021 11:53 PM

ADVERTISEMENT

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.94 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4,190 மூட்டைகளில் 2,01,000 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 98.99க்கும், அதிகபட்சமாக ரூ. 104.60க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 20.99க்கும், அதிகபட்சமாக ரூ. 100.20க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 1.94 கோடிக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT