ஈரோடு

ஈரோட்டில் மேலும் 76 பேருக்கு கரோனா: இருவா் பலி

30th Oct 2021 11:47 PM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் இருவா் உயிரிழந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 4,235ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 97 போ் பூரண குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.

இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 2,742 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 809 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் ஏற்கெனவே 682 போ் உயிரிழந்துள்ள நிலையில் சனிக்கிழமை மேலும் இருவா் உயிரிழந்துள்ளனா். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 684ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT