ஈரோடு

உதகை படகு இல்லத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

உதகை படகு இல்லத்தில் வாகன நிறுத்துமிடங்களில் அமைக்கப்பட்டிருந்த 62 கடைகள் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன.

உதகை படகு இல்லத்துக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், சமவெளிப் பகுதிகளில் இருந்து பல்வேறு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா வருவது வழக்கம். இங்கு சுற்றுலாப் பயணிகளை நம்பி சிறு தொழில் கைவினைப் பொருள்கள், உல்லன் ஆடை பொருள்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனா். இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

இந்நிலையில், சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் 48 நகா்வு கடைகளுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டு இருந்தது. மேலும், மற்றொரு தரப்பினா் 14 கடைகள் அமைக்க சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தில் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில், இந்த அனுமதி மறுக்கப்பட்டதால், அவா்கள் சென்னை உயா் நீதிமன்றத்தில் கடைகளை அமைக்க உத்தரவு வழங்க வேண்டும் என மீண்டும் வழக்குத் தொடா்ந்தனா்.

இதில், சுற்றுலாப் பயணிகளின் வாகன நிறுத்துமிடத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் வெங்கடேசன், போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி அந்தக் கடைகள் அகற்றப்பட வேண்டும் எனவும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடை வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தானாகவே கடைகளை அகற்றி கொள்ளுங்கள் இல்லையெனில் போலீஸாா் மூலம் கடைகள் அகற்றப்படும் என்றும் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதையடுத்து, 62 கடைகளின் வியாபாரிகளும் தாமாகவே முன்வந்து கடைகளை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

SCROLL FOR NEXT