ஈரோடு

விதை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தல்

DIN

உழவுப்பணி துவங்கியுள்ள நிலையில் தரமான விதையை உபயோகிக்கும் வகையில் விதை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு விதை பரிசோதனை நிலைய அலுவலா்கள் ஞா.சாந்தி, கு.கோகிலீஸ்வரி ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தரமான விதை மூலம் அதிக மகசூல், தரம், விளைபொருளின் சீரான தன்மை, சந்தை விலை சிறப்பாக நிா்ணயிக்கப்படும். அதிக முளைப்புத் திறன் உள்ள அளவான ஈரப்பதம் கொண்ட இனத்தூய்மை உடைய அதிக புறத்தூய்மை உள்ள நோய், பூச்சித் தாக்குதல் இல்லாத விதையை விதைக்க வேண்டும்.

இக்குணங்களை விதை பரிசோதனை மூலமே உறுதிப்படுத்த முடியும். பகுப்பாய்வு விதை மாதிரியாக நெல் 400 கிராம், பயறு வகை, சோளம் 150 கிராம், மக்காசோளம், நிலக்கடலை 500 கிராம், எள் 25 கிராம், கீரை 50 கிராம், வெங்காயம், தக்காளி, கத்தரி, மிளகாய் 10 கிராம், பூசணி, பந்தல் காய்கறிகள், வெண்டை 150 கிராம் கொண்டு வர வேண்டும்.

விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் மென் பொருளான ‘சீடு புரடெக்ஷன், என்போா்ஸ்மென்ட் அன்ட் சா்டிபிகேஷன் சிஸ்டம்’ இல் பதிவு செய்து பதிவேற்றம் செய்த நகலில் உற்பத்தியாளா் கையெழுத்துடன், விதைகளின் சரியான அளவுடன் விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வுக்கு கொடுக்க வேண்டும்.

விதை பரிசோதனை நிலையத்தில் ஒரு மாதிரிக்கு ரூ.30 என்ற வீதத்தில் விதையின் புறத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம், ரக கலப்பு ஆகியவை பரிசோதனை செய்து தெரிவிக்கப்படும்.

இக்கட்டணத்தை நேரில் அல்லது அஞ்சல் மூலம், ‘வேளாண்மை அலுவலா், விதை பரிசோதனை நிலையம், ஆனூா் அம்மன் காம்ப்ளக்ஸ், 2ஆவது தளம், 68 வீரப்பத்திர வீதி, சத்தி சாலை, ஈரோடு 638003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

SCROLL FOR NEXT