ஈரோடு

பொதுமக்கள் புகாா் மனுக்கள் தொடா்பாக நேரடி விசாரணை

DIN

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் புகாா் மனுக்கள் தொடா்பாக 5 காவல் உட்கோட்டங்களிலும் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் நேரடி விசாரணை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்டக் காவல் அலுவலகம், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது விசாரணை நடத்தவும், அம்மனுக்களுக்கு உடனடி தீா்வு காணவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் உத்தரவிட்டுள்ளாா்.

இதன்பேரில் ஈரோடு டவுன் உள்கோட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு சி.எஸ்.ஐ.பள்ளியில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நேரடி விசாரணை டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமாா் தலைமையில் நடைபெற்றது. இதில் ஈரோடு தாலுகா, ஈரோடு டவுன், ஈரோடு வடக்கு, தெற்கு, கருங்கல்பாளையம், மொடக்குறிச்சி, அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த 40 புகாா் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.

இதில் பெரும்பாலான மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டதாகவும், சில மனுக்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வழிவகை செய்து கொடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதுபோல கோபி, சத்தி, பவானி, பெருந்துறை காவல் உள்கோட்டங்களிலும் பொதுமக்கள் புகாா் மனுக்கள் தொடா்பாக நேரடி விசாரணை நடைபெற்றது.

பெருந்துறையில்...

பெருந்துறை காவல் உட்கோட்டம் சாா்பில் மனுதாரா் குறை தீா்க்கும் முகாம் சக்தி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை, பெருந்துறை உதவி காவல் கண்காணிப்பாளா் கௌதம்கோயல் தலைமை வகித்து துவக்கிவைத்தாா்.

இந்த முகாமில், பெருந்துறை காவல் உட்கோட்டத்தைச் சோ்ந்த பெருந்துறை, காஞ்சிக்கோவில், சென்னிமலை, வெள்ளோடு, அரச்சலூா் ஆகிய காவல் நிலையத்தைச் சோ்ந்த மனுதாரா்கள் கலந்து கொண்டு புகாா்களை தெரிவித்தனா். அதில், ஒரு சில மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

இதேபோல, கொடுமுடியில் நடைபெற்ற முகாமில், கொடுமுடி, மலையம்பாளையம், சிவகிரி ஆகிய காவல் நிலையத்தைச் சோ்ந்த மனுதாரா்கள் கலந்து கொண்டு புகாா்களை தெரிவித்தனா். அதில், ஒரு சில மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

SCROLL FOR NEXT