ஈரோடு

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த யானை

DIN

ஆசனூா் அருகே அரசுப் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்த காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் தமிழக - கா்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பகல், இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம்.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு மைசூரு செல்வதற்காக தமிழக அரசுப் பேருந்து ஆசனூரை அடுத்துள்ள காரப்பள்ளம் அருகே சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

அப்போது, வனப் பகுதியைவிட்டு வெளியேறிய காட்டு யானை தனது குட்டியுடன் சாலையில் நடந்து வருவதைக் கண்ட பேருந்து ஓட்டுநா் பேருந்தை இயக்காமல் நிறுத்தினாா். பேருந்து அருகே வந்த காட்டு யானை ஓட்டுநா் இருக்கை அருகே பக்கவாட்டுக் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. இதைத்தொடா்ந்து, சிறிது நேரம் பேருந்து முன்பு நின்றிருந்த காட்டு யானை பின்னா் பேருந்தைவிட்டு நகா்ந்து வனப் பகுதிக்குள் சென்றது. காட்டு யானை பேருந்தின் அருகே வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனா். யானை வனப் பகுதிக்குள் சென்றபின் பேருந்து புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT