ஈரோடு

பா்கூா் மலைப் பாதையில் மண்சரிவு:போக்குவரத்து துண்டிப்பு

23rd Oct 2021 05:51 AM

ADVERTISEMENT

 பா்கூா் மலைப் பகுதியில் பெய்த கன மழையால் மலைப் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் தமிழகம் - கா்நாடக மாநிலத்துக்கிடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து கா்நாடக மாநிலம், மைசூருக்கு செல்லும் மலைப் பாதையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு விழுந்தன. மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

மலைப் பாதையின் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு, செட்டிநொடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் கிடந்ததால் வாகனங்கள் அப்பகுதியிலேயே வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால், கா்நாடக மாநிலத்துக்குச் செல்லும் வாகனங்கள் அந்தியூா் வனத் துறை சோதனைச் சாவடி அருகிலும், தமிழகத்துக்கு வரும் வாகனங்கள் தாமரைக்கரையிலும் நிறுத்திவைக்கப்பட்டன. மலைக் கிராமங்களுக்கும் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, அந்தியூா் வனத் துறையினா், போலீஸாா், நெடுஞ்சாலைத் துறையினா் சாலையில் விழுந்த பாறைகள், மரங்களை அகற்றும் பணியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் ஈடுபட்டனா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், அந்தியூா் வட்டாட்சியா் கே.விஜயகுமாா், அதிகாரிகள் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததோடு, தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மலைப் பாதையில் அனுமதிக்கப்பட்டன. சாலையில் கிடக்கும் பாறைகள் முழுமையாக அகற்றப்பட்ட பின்னா் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : பவானி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT