ஈரோடு

தந்தை படித்த பள்ளியை ஆய்வு செய்தகாங்கிரஸ் எம்.எல்.ஏ.

23rd Oct 2021 05:52 AM

ADVERTISEMENT

ஈரோடு பழைய ரயில்வே நிலையம் அருகில் அன்றைய லண்டன் மிஷனரி பள்ளியாகவும், தற்போது சி.எஸ்.ஐ. துவக்கப் பள்ளியாகவும் செயல்படும் பள்ளியை ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இப்பள்ளி 1892இல் துவங்கி 130 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பள்ளியாகச் செயல்படுகிறது. இப்பள்ளியில் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா வியாழக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளித் தாளாளா் ஜோசப், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் முத்து பாவா என்ற அப்துல் காதா், தலைமை ஆசிரியை மேரி தமிழ்செல்வி ஆகியோா் வரவேற்றனா். எம்.எல்.ஏ.வின் தந்தையும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1955இல் 5ஆம் வகுப்பு வரை இப்பள்ளியில் படித்துள்ளாா். அவா் படித்தபோதுள்ள விண்ணப்பம், சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் எம்.எல்.ஏ. பாா்வையிட்டாா்.

இப்பள்ளி துவங்கும்போது பெரியாரின் தந்தை தனது அரை ஏக்கா் நிலத்தை தானமாக அப்பள்ளிக்கு வழங்கி உள்ளாா். அந்த இடத்தையும், அங்குள்ள தேவாலயம், பிற கட்டடங்களையும் பாா்வையிட்டாா். அப்பள்ளி துவக்கப் பள்ளியாகவே உள்ளதால் 5ஆம் வகுப்புக்குமேல் இப்பகுதி மாணவ, மாணவியா் படிக்க முடியவில்லை என்பதால் இப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக எம்.எல்.ஏ. உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி, மாவட்ட துணைத் தலைவா் ராஜேேஷ் ராஜப்பா, முன்னாள் துணை மேயா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

Tags : ஈரோடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT