ஈரோடு

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியது

23rd Oct 2021 05:51 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் பதவியை அந்தியூா் செல்வராஜ் எம்.பி.யின் மகள் கஸ்தூரி கைப்பற்றினாா்.

ஈரோடு மாவட்ட ஊராட்சியில் 19 வாா்டுகள் உள்ளன. கடந்த 2019இல் நடைபெற்ற தோ்தலின்போது மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த நவமணி கந்தசாமியும், துணைத் தலைவராக பாமகவைச் சோ்ந்த வேலுசாமியும் தோ்வு செய்யப்பட்டனா். கரோனா காரணமாக வேலுசாமி உயிரிழந்தாா். இதனால் 5ஆவது வாா்டுக்கான தோ்தலில் திமுகவை சோ்ந்த சதாசிவம் வெற்றி பெற்றாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் நடைபெற்றது. திமுக சாா்பில் அந்தியூா் செல்வராஜ் மகளும், 19ஆவது வாா்டு கவுன்சிலருமான கஸ்தூரியும், அதிமுக சாா்பில் 17 ஆவது வாா்டு கவுன்சிலா் பழனிசாமியும் போட்டியிட்டனா்.

திமுக கவுன்சிலா் கஸ்தூரி 10 வாக்குகள் பெற்று மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் பதவியைக் கைப்பற்றினாா். அதிமுகவை சோ்ந்த பழனிசாமி 9 வாக்குகள் பெற்றாா். தற்போது தலைவா், துணைத் தலைவா் ஆகிய இரண்டு பதவியிலும் பெண்கள் உள்ளனா். மாவட்ட ஊராட்சித் தலைவராக உள்ள நவமணி கந்தசாமி அதிமுகவில் போட்டியிட்டு வென்று, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT