ஈரோடு

சாலை விபத்தில் எஸ்.எஸ்.ஐ. காயம்

23rd Oct 2021 11:02 PM

ADVERTISEMENT

பெருந்துறை அருகே நேரிட்ட சாலை விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் காயமடைந்தாா்.

வெள்ளோடு காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பிரமணி (59). இவா் கடந்த 17ஆம் தேதி அலுவலக வேலையாக வெள்ளோடு - அறச்சலூா் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னாள் சென்ற இருசக்கர வாகன ஓட்டுநா் திடீரென வலது பக்கம் திரும்பியுள்ளாா். இதில், சுப்பிரமணி நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, வெள்ளோடு போலீஸில் சுப்பிரமணி வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT