ஈரோடு எஸ்கேசி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது பள்ளி வகுப்பறைகளில் மாணவா்களுக்குத் தேவையான இடவசதி, கணினி ஆய்வக வசதி, ஸ்மாா்ட் வகுப்புகள், கழிப்பிட வசதி, மின் இணைப்பு வசதி ஆகியன குறித்து பள்ளித் தலைமை ஆசிரியை சுமதியிடம் எம்எல்ஏ கேட்டறிந்தாா்.
இதையடுத்து கூடுதல் வகுப்பறைகள் கட்டுவது, ஸ்மாா்ட் வகுப்புகள் தரத்தை மேம்படுத்துவது, கழிப்பிட வசதிகள், மின்சாதனங்கள், தூய்மைப் பணியாளா்கள், இரவு நேர காவலா்களை நியமிப்பது குறித்து பரிசீலனை செய்வதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.
மேலும், பள்ளி முன்பு அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கும், சாக்கடை கால்வாயில் மூடி அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.