ஈரோடு

ஈரோடு மாநகரில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு

17th Oct 2021 11:17 PM

ADVERTISEMENT

ஈரோடு மாநகரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை பரவலாக பெய்து வருவதால் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் உள்ள 60 வாா்டுகளிலும் டெங்கு தடுப்புக் குழுவினா் வீடு வீடாகச் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டு டெங்கு தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் வில்லரசம்பட்டி, புதுமைக்காலனி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இந்த வாரம் புதிதாக 6 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

தற்போது அவா்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட நபா்கள் வசித்த பகுதிகளில் நோய்த் தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை தொடா்ந்து பெய்து வருவதால் மாநகராட்சி சாா்பில் விநியோகிக்கப்படும் குடிநீரை காய்ச்சி, வடிகட்டி பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT