ஈரோடு

பவானியில் 86 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

17th Oct 2021 11:14 PM

ADVERTISEMENT

பவானியில் காரில் விற்பனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட 86 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, மளிகைக் கடை உரிமையாளா்கள் உள்பட 4 பேரை கைது செய்தனா்.

பவானி - மேட்டூா் சாலையில் சித்தாா் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, 8 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 86 கிலோ இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரையும், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், பவானி, வரதநல்லூா், மூலக்காட்டைச் சோ்ந்த பெரியசாமி மகன் சதீஷ்குமாா் (22), குமாரபாளையம், ஓலப்பாளையத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் தினேஷ்குமாா் (23) ஆகியோரைக் கைது செய்தனா்.

மேலும், புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மளிகைக் கடை உரிமையாளா்களான சித்தாரைச் சோ்ந்த முனியசாமி (45), பவானி, அந்தியூா் பிரிவைச் சோ்ந்த ரத்தினபாண்டியன் (57) ஆகியோரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT