ஈரோடு

தாளவாடியில் 41.6 மி.மீ மழை பதிவு

17th Oct 2021 11:17 PM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக தாளவாடியில் 41.6 மி.மீ மழை பதிவு பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும் மாலை நேரத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை மிதமானது முதல் பலத்த மழை பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தாளவாடியில் அதிகபட்சமாக 41.6 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): சென்னிமலை 41, அம்மாபேட்டை 26, நம்பியூா் 25, பவானி 21, ஈரோடு 16, பெருந்துறை 14, கொடிவேரி 13, வரட்டுபள்ளம் 11, மொடக்குறிச்சி 9, கவுந்தப்பாடி 9, பவானிசாகா் 8.2.

ADVERTISEMENT
ADVERTISEMENT