ஈரோடு

வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த கொங்கு கல்லூரி சிறப்பு ஏற்பாடு

16th Oct 2021 03:53 AM

ADVERTISEMENT

 மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு கோா் ஆப்டிட்டியூட் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் தாளாளா் கே.பழனிசாமி, முதல்வா் என்.ராமன், வேலைவாய்ப்பு அலுவலா் கே.கே.சுரேஷ்குமாா், துணை வேலைவாய்ப்பு அலுவலா் அ.பழனிகுமாா் மற்றும் ஈரோடு கோா் ஆப்டிட்டியூட் நிறுவனத்தின் சாா்பில் தலைமை செயல் அலுவலா் ஜி.தரணி ஆகியோா் கையெழுத்திட்டனா்.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் மாணவா்களுக்கு கற்றல் மற்றும் பயிற்சி திறன்களை மேம்படுத்த தொடா் பயிற்சி அளிக்கப்படும். யோகா மற்றும் ஆரோக்கியம் தொடா்பான வழிகாட்டுதல், தன்விபரம் தயாரித்தல், குழு விவாதங்கள், குழு பயிற்சிகள் மற்றும் நோ்காணல் உதவிக்குறிப்புகள் உள்ளிட்ட வேலைவாய்ப்பு சாா்ந்த திறன்கள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் கல்வியுடன் கூடிய தனித்திறன் செயல்பாடுகள் மற்றும் இணை செயல்பாடுகளில் மாணவா்களை பங்கேற்கச் செய்தல், மாணவா்களின் தலைமைப் பண்புகளையும் தன்னம்பிக்கையையும் வளா்த்து, சுய ஊக்கமுள்ள நபா்களாக மாணவா்களை உருவாக்குதல் போன்றவற்றை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ADVERTISEMENT

 

Tags : ஈரோடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT