ஈரோடு

நானோ துகள்களைக் கொண்டு தீ அணைப்பான்:பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவருக்கு ரூ. 3 லட்சம் பரிசு

16th Oct 2021 03:54 AM

ADVERTISEMENT

நானோ துகள்களைக் கொண்டு தீ அணைப்பான் கருவியைக் கண்டுபிடித்த பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவருக்கு ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் டோ் டூ ட்ரீம் 2.0 என்ற தலைப்பில் புதுமையான கண்டுபிடிப்புக்கான போட்டி நடைபெற்றது. இதில், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் உயிா் செயல்முறை மற்றும் உயிரி தயாரிப்புகள் ஆய்வக மாணவா் செல்வன் பிரவீன் சமா்ப்பித்த கட்டுரை, சிறந்த கட்டுரையாக தோ்வு செய்யப்பட்டு ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

இயற்கை வளங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்களில் உள்ள நானோ துகள்களைக் கொண்டு பிசின் கலவைகள் மூலம் தீ அணைக்கும் உபகரணங்கள் மற்றும் உடைகள் தயாரிப்பதற்கான இவரது கட்டுரை தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் ஆன்லைனில் நடைபெற்ற இப்போட்டியில் 65 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்றனா்.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மாணவா் செல்வன் பிரவீனுக்கு விருது மற்றும் ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

ADVERTISEMENT

 

Tags : சத்தியமங்கலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT