ஈரோடு

வேன் மோதி விவசாயி பலி

16th Oct 2021 11:23 PM

ADVERTISEMENT

நம்பியூா் அருகே வேன் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நம்பியூா் அருகே உள்ள பிலியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (எ) கருப்புசாமி (70), விவசாயி. இவா் நம்பியூா் - கோவை சாலையில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கருப்பசாமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு கருப்புசாமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வரப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT