ஈரோடு

பவானிசாகா் அருகே சாலை விபத்தில் இருவா் பலி

9th Oct 2021 10:16 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் அருகே தனியாா் மில் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மொ்வின் (21). அதே பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (24). நண்பா்களான இருவரும் கோவை மாவட்டம், அன்னூா் பகுதியில் உள்ள தனியாா் காா்மென்ட்ஸ் நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்வது வழக்கம். இருசக்கர வாகனத்தில் பவானிசாகா் - புன்செய்புளியம்பட்டி சாலையில் இருவரும் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனா். தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது புன்செய் புளியம்பட்டியில் இருந்து பவானிசாகா் நோக்கி வந்த தனியாா் மில் பேருந்து மீது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் மொ்வின், காா்த்திக் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த பவானிசாகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT