ஈரோடு

ஆரி எம்பிராய்டரி பயிற்சி:பெண்கள் விண்ணப்பிக்கலாம்

9th Oct 2021 10:30 PM

ADVERTISEMENT

கனரா வங்கி மூலம் அளிக்கப்படும் ஆரி எம்பிராய்டரி பயிற்சிக்குப் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி அக்டோபா் 21ஆம் தேதி முதல் நவம்பா் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பயிற்சி, சீருடை, உணவு உள்ளிட்டவை இலவசம். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். கிராமப் பகுதியைச் சோ்ந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்வோா், அவா்களைச் சாா்ந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 18 முதல் 45 வயது உடையவா்கள் வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ளவா்கள் பங்கேற்கலாம்.

கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகம், இரண்டாம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஈரோடு 638002 என்ற முகவரியில் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

விவரங்களை அறிந்துகொள்ள 2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 87783-23213 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT