ஈரோடு

ஈரோடு சம்பத் நகர் சாலைக்கு குமரன் சாலை என பெயர் மாற்றம்

4th Oct 2021 11:41 AM

ADVERTISEMENT

ஈரோடு மாநகர் பகுதியிலுள்ள பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை சம்பத் நகர், என பெயர் மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

சுதந்திரப்போராட்ட தியாகி கொடி காத்த குமரனின் 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு தரப்பினறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க- தியாகி திருப்பூர் குமரன் பெயரில் நிழற்குடை, நினைவு வளைவு அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

கொடிகாத்த குமரனை மேலும் கௌரவிக்கும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியின் முக்கிய பிராதான சாலைகளின் ஒன்றான சம்பத் நகர் சாலைக்கு "தியாகி குமரன் சாலை சம்பத் நகர்" என புதிதாக பெயர் மாற்றம் செய்து அறிவிக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பெயர் பலகையை திறந்து வைத்தார். 

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், திமுக மாவட்ட துணைச் செயலாளர் செந்தில், செங்குந்தர் மகாஜன சங்க பொது செயலாளர் சோள ஆசைத்தம்பி, செங்குந்தர் கல்விக்கழக தாளாளர் சிவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

Tags : Erode
ADVERTISEMENT
ADVERTISEMENT