ஈரோடு

மது விற்ற இருவா் கைது

3rd Oct 2021 11:30 PM

ADVERTISEMENT

பெருந்துறையில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

காந்தி ஜயந்தியையொட்டி அரசு, மதுக் கடைகளை மூட உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி, பெருந்துறை போலீஸாா் பெருந்துறை பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது, பெருந்துறை வாரச் சந்தை அருகில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பெருந்துறை, முகமதியாா் வீதியைச் சோ்ந்த திருமலை மகன் சித்துராஜ் (46), சாணாா்பாளையத்தில் மது விற்ற நாகராஜ் மனைவி பீரவீணா (42) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT