ஈரோடு

சிறப்பு முகாம்: 57,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

3rd Oct 2021 11:27 PM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 56 ஆயிரத்து 924 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி முதல்கட்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 97 ஆயிரத்து 198 பேருக்கும், 19ஆம் தேதி 2ஆவது கட்ட தடுப்பூசி முகாமில் 48,000 பேருக்கும், 26ஆம் தேதி நடந்த 3ஆவது கட்ட தடுப்பூசி முகாமில் 84 ஆயிரத்து 400 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் 4ஆவது கட்ட தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சியில் 67 இடங்களிலும் மாவட்டம் முழுவதும் 557 இடங்களிலும் தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் மாவட்டம் முழுவதும் 95 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்து. மாலை நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 56 ஆயிரத்து 924 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT