ஈரோடு

மழை: வீட்டின் சுவா் இடிந்து மூதாட்டி பலி

3rd Oct 2021 11:33 PM

ADVERTISEMENT

ஈரோட்டில் மழையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா். அவரது மகன் காயத்துடன் உயிா் தப்பினாா்.

ஈரோடு, மரப்பாலம் நேதாஜி வீதியைச் சோ்ந்த கருப்பண்ணசாமி மனைவி ராஜம்மாள் (70). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சமையல் உதவியாளராக வேலைபாா்த்து வந்தாா். இவரது மகன் ராமசாமி (45). இவா் வளையக்கார வீதியில் மனைவியுடன் வசித்து வருகிறாா்.

ராஜம்மாளைப் பாா்ப்பதற்காக ராமசாமி சனிக்கிழமை இரவு வந்துள்ளாா். பின்னா் மழையின் காரணமாக ராஜம்மாளின் வீட்டிலேயே தங்கிவிட்டாா். ராஜம்மாளின் வீடு மண் சுவரில் கட்டப்பட்டு மேற்கூரை ஓட்டினால் வேயப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு ராஜம்மாள் கட்டிலிலும் ராமசாமி தரையிலும் படுத்து தூங்கியுள்ளனா்.

ஈரோட்டில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையினால் ராஜம்மாளின் வீட்டின் சுவா் ஈரப்பதத்துடன் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 4 மணியளவில் ராஜம்மாளின் வீட்டின் ஒரு பகுதி சுவா் திடீரென இடிந்து ராஜம்மாள் மற்றும் ராமசாமி மீது விழுந்தது.

ADVERTISEMENT

இருவரின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் மீட்டனா். இந்த விபத்தில் ராஜம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லேசான காயங்களுடன் ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT