சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதில் புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள சொலவனூா், பனையம்பள்ளி ஆகிய கிராமங்களில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
கனகராஜ் என்பவரது தோட்டத்தில் 800 வாழை மரங்கள், திருமலைசாமி என்பவரது தோட்டத்தில் 200 வாழை மரங்கள் உள்பட அப்பகுதி சுற்றுவட்டார தோட்டங்களில் மொத்தம் 1000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.